தூத்துக்குடியில் பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
தூத்துக்குடியில் பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது;–
பள்ளி மாணவர்
தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலனியை சேர்ந்தவர் ராஜா. மீனவர். இவரின் மனைவி பெர்டியா. இவர்களுக்கு ரபேக், போஸ் எட்வின் (வயது 17) என்ற 2 மகன்கள் உள்ளனர். ரபேக் 10 வரை படித்து உள்ளார். போஸ் எட்வின் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். பெர்டியா மனநலம் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக புன்னக்காயலில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். ராஜா அடிக்கடி மீன்பிடிக்க கடலுக்கு சென்று விடுவதால் அண்ணன், தம்பி 2 பேரும் அவர்களின் பாட்டி கிளமண்டாவின் பாதுகாப்பில் இருந்து வந்தனர்.
தற்கொலை
இந்த நிலையில் போஸ் எட்வின் கடந்த வாரம் சனிக்கிழமையில் இருந்து பள்ளிக்கு செல்லவில்லையாம். இதனால் நேற்று காலையில் கிளமண்டா, போஸ் எட்வினை பள்ளிக்கு செல்ல வேண்டும், இல்லை என்றால் என் அப்பா கடலுக்கு சென்று திரும்பியதும் சொல்லிவிடுவேன் என்று கூறினாராம். இந்த நிலையில் போஸ் எட்வின், மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story