நெல்லை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் போராட்டம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு


நெல்லை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் போராட்டம்  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2020 4:00 AM IST (Updated: 18 Feb 2020 8:47 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாங்குநேரி, 

நெல்லை அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது எதிர்ப்பை கடுமையாக்கியது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், தர்ணா போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நெல்லையில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் நேற்று முந்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர்கள் 

நெல்லை அருகே உள்ள மருதகுளம் நே‌ஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேசிய கொடிகளை கையில் ஏந்தியும், கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

Next Story