குருவிகுளம் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது


குருவிகுளம் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Feb 2020 3:00 AM IST (Updated: 18 Feb 2020 9:23 PM IST)
t-max-icont-min-icon

குருவிகுளம் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று முதல் சிறப்பு முகாம் நடக்கிறது.

தென்காசி, 

குருவிகுளம் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று முதல் சிறப்பு முகாம் நடக்கிறது.

சிறப்பு முகாம் 

இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2016–17, 2017–18 ஆம் ஆண்டுகளில் ஐசிஐசிஐ லம்பார்டு பொது காப்பீடு நிறுவனத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் கணக்கீட்டின்படி இழப்பீடு பெற தகுதி இருந்தும் வங்கி கணக்கு எண் ஆவணங்கள் சரியாக கொடுக்காத விவசாயிகளிடம் இருந்து ஆவணங்கள் சரிபார்த்து பெற்றிடவும், பிரதமரின் கிசான் திட்டத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்கள் சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ளவும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று தொடங்குகிறது 

வடக்கு குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி, சுந்தரேசபுரம், கே.ஆலங்குளம், செட்டிகுளம் ஆகிய கிராமங்களுக்கு இன்று (புதன்கிழமை) குருவிகுளம் வேளாண்மை விரிவாக்க மையத்திலும், செவல்குளம், மலையான்குளம், உசிலன்குளம், நாலுவாசன்கோட்டை, தெற்கு குருவிகுளம் ஆகிய கிராமங்களுக்கு ஆகிய கிராமங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) தெற்கு குருவிகுளத்திலும், ஏ.கரிசல்குளம், பெருங்கோட்டூர், சத்திரம்கொண்டான், அழகாபுரி, மதுராபுரி, ஏ.மதுராபுரி, வெள்ளகுளம் ஆகிய கிராமங்களுக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஏ.கரிசல்குளம் கிராமத்திலும் முகாம் நடக்கிறது.

பழங்கோட்டை, கே.கரிசல்குளம், களப்பாளங்குளம், நாலந்துலா, சாயமலை, மருதங்கிணறு, மகேந்திரவாடி ஆகிய கிராமங்களுக்கு 24–ந் தேதி கொக்குகுளம் கிராமத்திலும், திருவேங்கடம், சங்குபட்டி, வரகனூர், குளக்கட்டாகுறிச்சி, குறிஞ்சாக்குளம், மைப்பாறை ஆகிய கிராமங்களுக்கு 25–ந் தேதி மைப்பாறை கிராமத்திலும், கலிங்கப்பட்டி, காரிசாத்தான், குலசேகரப்பேரி, சத்திரப்பட்டி, ரெங்கசமுத்திரம், சுப்பையாபுரம் ஆகிய கிராமங்களுக்கு 27–ந் தேதி கலிங்கப்பட்டியிலும் முகாம் நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு குருவிகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story