சென்னையில் 3 இடங்களில் துணிகர வழிப்பறி 5 பவுன் நகையை பறிகொடுத்த பெண்
சென்னையில் 3 இடங்களில் வழிப்பறி சம்பவம் நடைபெற்றது. இதில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் 5 பவுன் நகையை பறிகொடுத்தார்.
சென்னை,
சென்னை எழும்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீமகள் (வயது 46). இவர் தனது கணவர் ஜெயக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் தேனாம்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், ஸ்ரீமகள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்தவர் சுமி மேத்யூ. இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் படிக்கும் தனது மகளை விட்டுவிட்டு, வெளியே வந்தார். அப்போது அவருடைய செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசில் சுமி மேத்யூ புகார் அளித்தார்.
வாலிபரை தாக்கி...
சென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(20). இவர் எழும்பூர் அரசு அருங்காட்சியகம் வழியாக நேற்றுமுன்தினம் இரவு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை செல்போனை வடமாநில வாலிபர் ஒருவர் பறிக்க முயன்றார். ஆனால் அப்துல் ரகுமான் சுதாரித்துக் கொண்டு செல்போனை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டார்.
இந்தநிலையில் அப்துல் ரகுமான் முகத்தில் காயத்தை ஏற்படுத்திவிட்டு, அந்த வாலிபர் தப்பி விட்டார். காயமடைந்த அப்துல் ரகுமான் எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த 3 சம்பவங்களிலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story