டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி ஆண்டு விழா
சென்னை அடுத்த புழலில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 17-ம் ஆண்டு விழா நடந்தது.
செங்குன்றம்,
சென்னை அடுத்த புழலில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 17-ம் ஆண்டு விழா சென்னைவாழ் நாடார்கள் சங்க பொது செயலாளரும், காமராஜர் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை செயலாளருமான டி.தங்கமுத்து தலைமையில் நடைபெற்றது.
பள்ளி நிர்வாக அதிகாரி ஏ.என்.எஸ்.கோவிந்தசாமி அனைவரையும் வரவேற்றார். சங்க துணைத் தலைவர்கள் எம்.ஏ. திரவியம் நாடார் கரூ.சி. சின்னதுரை நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை வாழ் நாடார்கள் சங்கத் தலைவரும், காமராஜர் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவருமான பி.சின்னமணி நாடார் சிறப்புரை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பிரீமியர் கம்பெனி நிர்வாக இயக்குனர் எஸ்.சிவனேசன் கலந்துகொண்டு சிறந்த பெற்றோர்கள் 45 பேருக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் படம் பொறித்த கேடயங்களை வழங்கினார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். விழாவில் பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயலாளர் எஸ்.செல்லதுரை நாடார், கல்விக்குழு உறுப்பினர்கள் டி .முல்லை ராஜா, எஸ்.எஸ்.பாண்டியன், ஜி.நாகராஜன், ஆர்.செல்வகுமார், கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ஜெசி, துணை முதல்வர் டாக்டர் சி.ராமகிருஷ்ணன், மேலாளர் முத்து சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் ஆண்டு அறிக்கையை பள்ளி முதல்வர் கே.வி.வெங்கடேசன் வாசித்தார். விழா முடிவில் பள்ளி துணை முதல்வர் கே.வி.ராம்மோகன் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story