சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து   காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 4:23 AM IST (Updated: 19 Feb 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பூர், 

சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகர் தலைமையில் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் நேற்று மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர்கள் சிரஞ்சீவி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரசார் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து ஏராளமான பெண்கள் பாடை முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story