வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாண்லே ஊழியர்கள் 7 பேர் மீது வழக்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. புகார் எதிரொலி


வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாண்லே ஊழியர்கள் 7 பேர் மீது வழக்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. புகார் எதிரொலி
x
தினத்தந்தி 19 Feb 2020 4:30 AM IST (Updated: 19 Feb 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. கொடுத்த புகாரின்பேரில் பாண்லே ஊழியர்கள் 7 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு போலீஸ் நிலையத்தில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

பாண்லே ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி குருமாம்பேட் தொழிற்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான் (தீப்பாய்ந்தான்) சென்றேன்.

அப்போது சில ஊழியர்கள் தொழிற்சாலை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தி சாதி ரீதியாக அவமதித்து திட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

7 பேர் மீது வழக்கு

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்லே ஊழியர்கள் துரைமுருகன், ராஜசேகரன், மகேஷ், சுப்புராயலு, சரவணகுமார், சிவசுப்பிரமணியன், வெங்கடேசன் ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story