தோஷம் கழிப்பதாக கூறி 6 பவுன் நகை மோசடி - சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு


தோஷம் கழிப்பதாக கூறி 6 பவுன் நகை மோசடி - சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Feb 2020 3:45 AM IST (Updated: 19 Feb 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

தோஷம் கழிப்பது போல் நடித்து 6 பவுன் தங்க நகையை திருடிச்சென்ற சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை, 

சிவகங்கையை அடுத்த சோழபுரத்தை சேர்ந்தவர் பாசநாயகம் (வயது65). இவரது மனைவி பத்மினி (57). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டிற்கு சாமியார் போன்று காவி உடை அணிந்துகொண்டு ஒருவர் வந்தார்.

அவர் வீட்டில் இருந்தவர்களிடம், உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது என்றும் அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். எனவே தோஷம் கழிக்க பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதை நம்பிய தம்பதிகள் அந்த சாமியாரை வீட்டிற்கு வரவழைத்து பூஜை செய்தனர்.

சம்பவத்தன்று அந்த சாமியார் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து சிவகங்கை மற்றும் ஒக்கூரில் உள்ள கோவில்களுக்கு சென்று பூஜை செய் தனர். பூஜை செய்யும் சமயத்தில் அந்த சாமியார் பத்மினியின் 6 பவுன் தங்க நகையை வாங்கி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. பூஜை முடிந்தபின் பார்த்த போது நகைகளை காணவில்லை. மேலும் சாமியாரும் தப்பிச்சென்றுவிட்டாா். இதுகுறித்து பாசநாயகம் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து சாமியாரை தேடி வருகிறார்.

Next Story