குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதை உடனடியாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முகமது யாசின், பெரியார் பேரவை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கலையரசன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் புவனேஸ் ஆகியோர் பேசினர்.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், புதுச்சேரி, மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக அரசும் சட்டமன்ற கூட்ட தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல வண்ணாங்குண்டு முஸ்லிம் ஜமாத், கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்தின் பாதகமான அம்சங்கள் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி செய்யது இப்ராகிம், மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் சிவசண்முகம், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அஸ்கர் நன்றி கூறினர்.
Related Tags :
Next Story