சேலம் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
சேலம் மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகரில் அமைந்துள்ள சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து அதன் விளக்கங்களை எடுத்து கூறும் விதமாக தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிருந்து 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பொன்னுசாமி, கோகுல்விஜய், முன்னாள் மாணவிகள் ராஜேஸ்வரி, லட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டு தாங்கள் எவ்வாறு கல்லூரியில் படித்து தற்போதைய நிலைக்கு உயர்ந்து உள்ளோம் மற்றும் இன்றைய சூழ்நிலையில் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு அங்கு நிலவும் நடைமுறைகள், சுயமாக தொழில் தொடங்குவதற்கான வழிவகைகள் அவற்றிற்காக அரசிடம் இருந்து கிடைக்க கூடிய மானியங்கள் ஆகியவைகளை பற்றி விளக்கமாக கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் தலைவர் லோகநாதன், செயலாளர் எஸ்.பாலு, பொருளாளர் ஆனந்தன், உதவி தலைவர்கள் ஞானசேகரன், வெங்கட்பதி, இணை செயலாளர் திருஞானம், கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கரன் மற்றும் பேராசியரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story