கொல்லிமலையில் ரூ.7½ கோடி மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணி: சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


கொல்லிமலையில் ரூ.7½ கோடி மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணி: சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Feb 2020 6:44 AM GMT (Updated: 19 Feb 2020 6:44 AM GMT)

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் குண்டூர்நாடு ஊராட்சி தேனூர்பட்டி கிராமத்தில் ரூ.7 கோடியே 40 லட்சம் மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.

சேந்தமங்கலம் சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி தேனூரில் இருந்து பலாப்பாடி வரை 4 கி.மீட்டர் தொலைவிற்கும், கீரைக்காடு முதல் வேலிக்காடு வரை 10 கி.மீட்டர் வரையிலும் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின்போது மலைவாழ்மக்கள் சந்திரசேகரன் எம்.எல்.ஏ.விடம், மலைப்பகுதிகளுக்கு பணிக்கு வரும் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் காலை 11.30 மணிக்கு மேல் தான் வருகின்றனர் என்று புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கூறினார். 

நிகழ்ச்சியில் கொல்லிமலை ஒன்றிய தலைவர் மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சிவபிரகாசம், ஒன்றிய கவுன்சிலர் கம்ப பாலுசாமி, ஒப்பந்ததாரர்கள் சண்முகபாண்டியன், தினகரன், யுவராஜ் சந்திசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story