தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நாளை நடக்கிறது


தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 19 Feb 2020 4:54 PM IST (Updated: 19 Feb 2020 4:54 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு போட்டி
மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்கு 2019-20-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

இதில் கால் ஊனமுற்றோருக் கான 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், கை ஊனமுற் றோருக்கான 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானவர்களுக் கான 50 மீட்டர் ஓட்டம், 2 கால்களும் ஊனமுற்றோருக் கான 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டி, பூப்பந்து போட்டி, முற்றிலும் பார்வை யற்றோருக்கான 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், மிகக் குறைந்த பார்வையற்றோருக் கான 100 மீட்டர் ஓட்டம், நின்றநிலையில் தாண்டுதல், பந்து எறிதல் மற்றும் கைப்பந்து போட்டி நடக்கிறது.

சான்றுகள்
இதேபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், பந்து எறிதல், மூளை நரம்பு பாதிக்கப்பட்டவர்களுக்கான நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் எறிபந்து போட்டிகள், காதுகேளாதோருக்கான 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் கபடி போட்டி நடக்கிறது.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. இதில் கலந்து கொள்பவர்கள் அங்கீகரிக்கப் பட்ட டாக்டரால் வழங்கப் பட்ட மருத்துவச்சான்று, மாவட்ட மறுவாழ்வு அதிகாரி யால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தவிர்க்க இயலாத ஆணை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டுவர வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story