விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 25–ந் தேதி நடக்கிறது


விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 25–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 19 Feb 2020 10:15 PM GMT (Updated: 2020-02-19T17:37:13+05:30)

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 25–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை, 

கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் தங்கள் குறைகளை கோரிக்கைகளாகவும், மனுக்களாகவும் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Next Story