செம்மரம் வெட்ட சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது


செம்மரம் வெட்ட சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2020 3:15 AM IST (Updated: 19 Feb 2020 6:11 PM IST)
t-max-icont-min-icon

ஜமுனாமரத்தூரில் செம்மரம் வெட்ட சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜமுனாமரத்தூர், 

ஜமுனாமரத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜமுனாமரத்தூர் கூரப்பட்டு ரோடு பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் எலவந்தபுதூர் கிராமத்தை சேர்ந்த கணேசன், பெரிய மச்சூர் கிராமத்தை சேர்ந்த பிரபு, மேல் விளாமுச்சி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி, கல்யாண மந்தை பகுதியை சேர்ந்த குப்புசாமி, சத்யராஜ், ஏழுமலை ஆகியோர் என்பதும், ஆந்திராவுக்கு சென்று செம்மரம் வெட்ட திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

Next Story