விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம்
திரிசூர் கிராமத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
போளூர்,
தமிழக அரசு சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைக்கட்டுகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட உள்ளது. அதன்படி போளூர், கலசபாக்கம், ஆரணி, செங்கம், செய்யாறு, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள 146 ஏரிகள் உள்பட நீர்நிலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, இந்த நீர்நிலைகள் மூலம் பயன்பெறும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திரிசூர் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு கூறுகையில், ‘ஏரிக்கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகுகளை சரிசெய்ய வேண்டும். நீர்வரத்து கால்வாயை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்றனர்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினர்.
Related Tags :
Next Story