மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவண்ணாமலை பிரிவு சார்பில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார், மாவட்ட மாற்றுத்திறானிகள் நல அலுவலர் சரவணன், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி திட்ட இயக்குனர் லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், செல்வக்குமார், சீனுவாசன், பிரபு, சத்யன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பின்றி 50 மீட்டர், 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், சக்கர நாற்காலியில் இலக்கை அடைதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், நின்ற நிலை தாண்டுதல் போன்ற தடகள போட்டிகளும், இறகுபந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், எறிபந்து, கபடி போன்ற குழு போட்டிகளும் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story