ராணிப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம்


ராணிப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 3:45 AM IST (Updated: 19 Feb 2020 7:29 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சந்தை மைதானம் பகுதியில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து சர்ஜமாத் மற்றும் ஜமாத்துல் உலமா சார்பில் தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முற்றுகையிடும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சந்தை மைதானம் பகுதியில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை சர்ஜமாத் தலைவர் அப்துல்வாகித் தலைமை தாங்கினார். அனைத்து ஜமாத் முத்தவல்லிகள், பட்டேல்கள் மற்றும் உலமாக்கள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை சர்ஜமாத் செயலாளர் அயாத் பாஷா வரவேற்றார்.

இதில் உலமா ஆபாக் காஷிமி, இமாம் அப்துல்லா மிஸ்பாகி, சர்ஜமாத் ஒருங்கிணைப்பாளர் முகம்மதுஅசன், ஜமியதுல் உலமா அல்ஹிந்த் மாவட்ட செயலாளர் அப்துல் கரீம் காஷிபி, மேல்விஷாரம் நகர தி.மு.க. செயலாளர் மன்சூர்பாஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா என்கிற சார்லஸ், மாவட்ட துணை செயலாளர் தமிழ் உள்பட சர்ஜமாத்தின் நிர்வாகிகளும், முஸ்லிம்களும் கலந்துகொண்டு கோ‌ஷமிட்டனர். முடிவில் வாலாஜா சர்ஜமாத் தலைவர் அக்பர்செரீப் நன்றி கூறினார்.

போராட்டத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமையில் 250–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story