மனைகளை வரன்முறைப்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம்


மனைகளை வரன்முறைப்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 3:45 AM IST (Updated: 19 Feb 2020 8:51 PM IST)
t-max-icont-min-icon

அனுமதியற்ற பிரிவுகளில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில், 

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கட்டிட அனுமதி மற்றும் அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகளை வரன்முறைப் படுத்துவது குறித்து மாநகராட்சியில் பதிவு பெற்ற என்ஜினீயர்கள் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான என்ஜினீயர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலக நேசமணி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் 2019–ன்படி வணிக ரீதியான கட்டிடங்கள் மற்றும் மூன்று குடியிருப்புகளுக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள் கட்டும்போது கட்டிடத்தின் அடிமட்டப்பணி (பேஸ் மட்டம்) முடிவடைந்ததும் பிளான் அப்ரூவல்படிதான் கட்டிடம் கட்டப்படுகிறது என்ற விவரங்களை மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டிடப்பணிகள் முடிவடைந்ததும் பிளான் அப்ரூவல்படிதான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று கட்டிட முடிவு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை கொடுத்தால்தான் கட்டிடத்துக்கான வரி மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க முடியும். அதை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் நகர் ஊரமைப்பு சட்டம் 1971–ன்படி பூட்டி சீல்வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியற்ற மனைப்பிரிவு திட்டம் இன்னும் முடிவடையவில்லை. அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள மனைகளுக்கு ஒன்றிரண்டு பேர் பணம் செலுத்தியிருந்தாலும், அதனுடன் இணைந்த மற்ற மனைகளைச் சேர்ந்தவர்கள் பணம் செலுத்தலாம். அதற்குரிய ஸ்கெட்ச் ஆவணம் இல்லாத பட்சத்தில் யாராவது அந்த மனைப்பிரிவில் பணம் செலுத்திய ரசீது இருந்தால் அதனைக் காட்டி பணம் செலுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு ஆணையர் சரவணக்குமார் கூறினார். கூட்டத்தில் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி விமலா, ஆய்வாளர்கள் கெபின்ஜாய், சந்தோஷ்குமார், துர்காதேவி, மகேஸ்வரி மற்றும் என்ஜினீயர்கள் கலந்து கொண்டனர்.

Next Story