செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி
தஞ்சை அருகே வங்கி அதிகாரியின் செல்போனில் ஆபாச படங்கள் இருந்தது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என அவரது மனைவி கூறினார்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை அருகே உள்ள கள்ளப்பெரம்பூர் வகாப் நகரை சேர்ந்தவர் அருள்மணி. இவருடைய மகள் தாட்சர்(வயது 32). இவருக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த லூயிஸ் விக்டர் மகன் எட்வின் ஜெயக்குமார்(36) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி மணப்பாறையில் திருமணம் நடந்தது. எட்வின் ஜெயக்குமார், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் காசாளராக பணி புரிந்து வருகிறார்.
திருமணத்துக்கு பின்னர் தாட்சர், மணப்பாறையில் உள்ள அவருடைய கணவர் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான சில நாட்களிலேயே எட்வின் ஜெயக்குமாரின் நடவடிக்கையில் தாட்சருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் எட்வின் ஜெயக்குமார் அவருடைய மனைவி தாட்சரிடம் கூடுதலாக 50 பவுன் நகைகளை வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
ஆபாச படங்கள்
இந்த நிலையில் ஒரு நாள் தாட்சர், தனது கணவர் எட்வின் ஜெயக்குமாரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அந்த செல்போனில் எட்வின் ஜெயக்குமார், பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தாட்சர், இது குறித்து தனது மாமியார் லில்லி ஹைடா, நாத்தனார் நிர்மலாமேரி, உறவுக்கார பெண் ரீட்டா ஆகியோரிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளாததால் இது தொடர்பாக தனது கணவரிடமே நேரடியாக கேட்டு விடுவது என்று முடிவு செய்தார். இதனையடுத்து தாட்சர் தனது கணவர் எட்வின் ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார். அதைக்கேட்ட எட்வின் ஜெயக்குமார், இது தொடர்பாக இனிமேல் பேசினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று தாட்சருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
போலீசில் புகார்
மேலும் மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டி என்ற மலைப்பகுதிக்கு தாட்சரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற எட்வின் ஜெயக்குமார், அங்கு வைத்தும் இந்த விசயத்தை இனிமேல் கிளறக்கூடாது. அப்படி கிளறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன தாட்சர் தனது குடும்பத்தினரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மணப்பாறையில் இருந்து தஞ்சை வந்த தாட்சர் தனது கணவரின் அசிங்கமான நடவடிக்கைகள் குறித்தும், அதைக்கேட்ட தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியது குறித்தும் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் மற்றும் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாட்சர் புகார் அளித்தார்.
முன்ஜாமீன் ரத்து
இதன் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார், எட்வின் ஜெயக்குமார் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருடைய தாய் லில்லிஹைடா, சகோதரி நிர்மலாமேரி, உறவுக்கார பெண் ரீட்டா மற்றும் எட்வின் ஜெயக்குமாருடன் வங்கியில் வேலை பார்த்து வரும் தேவிபிலோமினா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில் எட்வின் ஜெயக்குமாரும் அவருடைய உறவினர்களும் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றனர். இதை அறிந்த தாட்சர் மதுரை ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு, எட்வின் ஜெயக்குமாருக்கு அளித்திருந்த முன் ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் தலைமறைவாக உள்ள எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்.
இது குறித்து எட்வின் ஜெயக்குமார் மனைவி தாட்சர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்ப்பம்
எட்வின் ஜெயக்குமார் திருமணமானதில் இருந்து இரவு நேரங்களில் செல்போனில் மூழ்கி விடுவார். இதனால் சந்தேகம் அடைந்து நான் அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது அந்த செல்போனில் பல பெண்களின் நிர்வாண படங்கள், பல பெண்களுடன் படுக்கையில் இருப்பது போன்ற படங்கள், வீடியோக்கள், ஆபாச உரையாடல்கள் அடங்கிய ஆடியோக்கள், வாட்ஸ்-அப் தகவல்கள் இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது மாமியார், நாத்தனாரிடம் இது குறித்து கூறினேன். அவர்கள் இது குறித்து கவலைப்படாமல் என்னிடம் கூடுதல் வரதட்சணையாக 50 பவுன் நகைகளை கேட்டனர். எட்வின் ஜெயக்குமாரால் மேலும் ஒரு பெண் கர்ப்பமாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
திடுக்கிடும் தகவல்கள்
மேலும் வங்கிக்கு கடன் கேட்டு வரும் பெண்களுக்கு அவர் உதவி செய்வது போல நடித்து அவர்களின் வாழ்க்கையையும் சீரழித்து உள்ளார். இவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் திருமணமானவர்கள் என்பதால் வெளியில் இது குறித்து அவர்கள் ஏதும் சொல்லவில்லை. மேலும் அவர் தான் வசித்த பகுதியில் உள்ள பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படம் பிடித்து உள்ளார்.
அவரால் மேலும் பெண்கள் ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக நான் போலீசில் புகார் அளித்தேன்.
ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் எனது கணவர் கைது செய்யப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.
எட்வின் ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, எட்வின் ஜெயக்குமாரை தேடி மணப்பாறை சென்றபோது அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும், எட்வின் ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story