வடபாதிமங்கலத்தில் 3 திருநங்கைகளுக்கு ஆதார், குடும்ப அட்டை ஊராட்சி தலைவர் வழங்கினார்


வடபாதிமங்கலத்தில் 3 திருநங்கைகளுக்கு ஆதார், குடும்ப அட்டை ஊராட்சி தலைவர் வழங்கினார்
x
தினத்தந்தி 20 Feb 2020 4:00 AM IST (Updated: 20 Feb 2020 1:10 AM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலத்தில் 3 திருநங்கைகளுக்கு ஆதார், குடும்ப அட்டைகளை ஊராட்சி தலைவர் சித்தரஞ்சன் வழங்கினார்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் வசித்து வருபவர்கள் செல்லக்கனி, நதியா, அவந்திகா. இவர்கள் 3 பேரும் திருநங்கைகள் ஆவர். இவர்கள் தங்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, 100 நாள் அட்டை கேட்டு வடபாதிமங்கலம் ஊராட்சி தலைவர் சித்தரஞ்சனிடம் முறையிட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் செல்லக்கனி, நதியா, அவந்திகா ஆகிய 3 பேருக்கு ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் அட்டைகளை வழங்கினார். அப்போது ஊராட்சி செயலாளர் லெட்சாதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில்,

திருநங்கைகளான எங்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, 100 நாள் அட்டை கேட்டு பலரிடம் முறையிட்டோம். அதற்கு நீங்கள் ஒரு ஊரில் நிரந்தரமாக வசிக்க மாட்டீர்கள். அதனால் அவைகள் கிடைக்காது என்று கூறினர். இந்தநிலையில் வடபாதிமங்கலம் ஊராட்சி தலைவரிடம் முறையிட்டோம். அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு எங்களுக்கு ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் அட்டை பெற்று தந்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்திலேயே முதன் முறையாக எங்களுக்கு இவைகள் கிடைத்தன. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story