குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கறம்பக்குடியில் முஸ்லிம்கள் தர்ணா


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கறம்பக்குடியில் முஸ்லிம்கள் தர்ணா
x
தினத்தந்தி 19 Feb 2020 11:30 PM GMT (Updated: 19 Feb 2020 8:56 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, கறம்பக்குடியில் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர் தர்ணா போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே தர்ணா போராட்டம் தொடங்குவதாக முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

தர்ணா

இதைத்தொடர்ந்து கறம்பக்குடி புளியஞ்சோலை பள்ளிவாசல் அருகே நேற்று மாலை தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது. இந்த தர்ணா போராட்டத்துக்கு குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரகமுத்துல்லா தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், இச்சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் கோ‌‌ஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தையொட்டி கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story