பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் சித்தப்பா கைது


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் சித்தப்பா கைது
x
தினத்தந்தி 20 Feb 2020 3:45 AM IST (Updated: 20 Feb 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவரது தாய் இறந்து விட்ட காரணத்தாலும், தந்தை கைவிட்டு சென்றதால் அவர், சித்தியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவி திண்டுக்கல்லில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் காது வலியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக விடுதியில் இருந்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள சித்தி வீட்டிற்கு வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு சித்தப்பா காளிதாஸ் (வயது49) வந்தார். மாணவி தனியாக இருப்பதை அறிந்த காளிதாஸ் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து அந்த மாணவி சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வருவதற்குள் காளிதாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் காளிதாஸ் மீது போக்சோ, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையிலான போலீசார் காளிதாசை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆனைமலை முக்கோணத்தில் நின்று கொண்டிருந்த காளிதாசை போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சித்தப்பா கைது செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story