கள்ளக்குறிச்சியில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை


கள்ளக்குறிச்சியில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 19 Feb 2020 9:30 PM GMT (Updated: 19 Feb 2020 9:47 PM GMT)

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனையானது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம், சின்னசேலம், தியாகதுருகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்யும் பருத்தியை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள்.

அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரத்து 364 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர்.

அவற்றில் ஒரு குவிண்டால் எல்.ஆர்.ஏ. ரகம் பருத்தி அதிகபட்சமாக 5 ஆயிரத்து 489 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 3 ஆயிரத்து 199 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த பருத்தி மூட்டைகளை சேலம், ஆத்தூர், திருப்பூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

நேற்று மட்டும் ரூ.1 கோடியே 56 லட்சத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டதாக கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்தார்.

Next Story