நவிமும்பை மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர்கள் 4 பேர் திடீர் ராஜினாமா சிவசேனாவில் சேர முடிவு?


நவிமும்பை மாநகராட்சி   பா.ஜனதா கவுன்சிலர்கள் 4 பேர் திடீர் ராஜினாமா   சிவசேனாவில் சேர முடிவு?
x

நவிமும்பை மாநகராட்சியை சேர்ந்த பாரதீய ஜனதா கவுன்சிலர்கள் 4 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் சிவசேனாவில் சேர முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் அரசியல் ஆதாயம் கருதி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என பலர் பாரதீய ஜனதா மற்றும் சிவசேனாவில் சேர்ந்தனர். நவிமும்பையில் தேசியவாத காங்கிரசின் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கிய கணேஷ் நாயக் மற்றும் அவரது மகன்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தனர். அவர்கள் ஆதரவாளர்கள் பலரும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார்கள். ஆனால் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் காட்சி மாறியது.

கவுன்சிலர்கள் ராஜினாமா

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்க்கட்சி வரிசையில் பாரதீய ஜனதா அமர்ந்துவிட்ட நிலையில், அரசியல் ஆதாயம் கருதி அந்த கட்சியில் சேர்ந்தவர்கள் தற்போது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சட்டசபை தேர்தலுக்கு முன் பாரதீய ஜனதாவில் சேர்ந்த நவிமும்பை மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ் குல்கர்ணி, ராதா குல்கர்ணி, சங்கீதா வாஸ்கே, காவ்லி முத்ரிகா ஆகிய 4 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.

மேலும் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர்.

அவர்கள் சிவசேனாவில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story