மூத்தோர்தடகள போட்டி: கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டு 3 தங்கம் வென்றார்
மணிப்பூர் மாநிலம்இம்பாலில் நடைபெற்ற மூத்தோர்களுக்கான தடகள போட்டியில் கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டு 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
ஏட்டு கோவிந்தராஜ்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் சபரி காடன்பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது41). இவர் கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் தமிழ்நாடு தடகள சங்கம்சார்பில்மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடந்த 41-வது தேசிய அளவிளான மூத்தோர் தடகளபோட்டியில் பங்கு பெற்றார்.
தங்கம் வென்றார்
40-வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் தேசிய அளவிளான மூத்தோர் பிரிவுக்கான தடகளபோட்டியில் கலந்து கொண்ட ஏட்டு கோவிந்தராஜ் 100மீட்டர், 200மீட்டர், 4×400மீட்டர்ஆகிய 3 போட்டிகளில் வெற்றிபெற்று 3 தங்கப்பதக்கங்களையும், 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.
பாராட்டு
தடகளபோட்டிகளில் 3 தங்க பதக்கங்களையும் ,ஒரு வெள்ளிபதக்கத்தையும் கைப்பற்றிய ஏட்டுகோவிந்தராஜை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா,கோவைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் போலீஸ்துணைசூப்பிரண்டுஅனிதா ,பேரூர்போலீஸ்துணை சூப்பிரண்டுவேல்முருகன், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் மற்றும் போலீசார் பாராட்டினார்கள். இந்தபோட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம்அடுத்து கனடாவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிளான தடகளபோட்டியில் கலந்துகொள்ள ஏட்டு கோவிந்தராஜ் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story