இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-20T18:36:28+05:30)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடியாத்தம்,

குடியாத்தம் நகர, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய தலைவர் நா.பரமசிவம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் துரைசெல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.மகேந்திரன், நிர்வாகிகள் ஜெயராமன், சின்னதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன், பீடி சங்க செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

இதில் நிர்வாகிகள் டி.ஆனந்தன், சூரவேலு, வேலாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story