தேசூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு


தேசூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 21 Feb 2020 3:30 AM IST (Updated: 20 Feb 2020 6:53 PM IST)
t-max-icont-min-icon

தேசூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசூர் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர்.

சேத்துப்பட்டு, 

கடந்த சில மாதங்களாக நெல் வாங்கிய வியாபாரிகள் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய காலதாமதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் சங்கத்தினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் (பொறுப்பு) விஸ்வநாதனிடம் கேட்டபோது, விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கி தொகையை வியாபாரிகள் 24–ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) முழுமையாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என கடுமையாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால் தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தி வைத்து நாங்களே ஒழுங்குமுறை கூடத்தின் முன்வாசல் கேட்டை பூட்டி வைத்து உள்ளோம். விவசாயிகளுக்கு நிர்வாகம் தெரிவிக்கும் வரை நெல் மூட்டைகளை தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்துவர வேண்டாம்’ என்றார்.

Next Story