4 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்


4 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்
x
தினத்தந்தி 21 Feb 2020 3:30 AM IST (Updated: 20 Feb 2020 7:20 PM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி இயங்கிய 4 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வாலாஜா, 

வாலாஜா பகுதியில் அனுமதியின்றி குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா தலைமையில், வருவாய் ஆய்வாளர் சோனியா, கிராம நிர்வாக அலுவலர்கள் அதியமான், பழனி, சங்கீதா ஆகியோர் அடங்கிய குழுவினர் வாலாஜா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது குடிமல்லூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், தென்கடப்பந்தாங்கல் ஆகிய இடங்களில் அனுமதியின்றி இயங்கிய 4 சுத்திகரிப்பு நிறுவனங்களை பூட்டி சீல் வைத்தனர்.

Next Story