கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகை அரசு நிலத்தை மீட்க கோரிக்கை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகை  அரசு நிலத்தை மீட்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2020 3:30 AM IST (Updated: 20 Feb 2020 7:49 PM IST)
t-max-icont-min-icon

அரசு நிலத்தை மீட்க கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி, 

அரசு நிலத்தை மீட்க கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எட்டயபுரம் தாலுகா செயலாளர் ரவீந்திரன் தலைமையில், அனைத்து கட்சியினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

நடவடிக்கை 

அந்த மனுவில், எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் இணைந்து போராடி வருகிறோம். தற்போது அந்த நிலத்தை தனிநபர் பெயரில் பட்டா பெற முயற்சி செய்து வருகின்றனர். எனவே அந்த நிலத்தை அரசு மீட்க வேண்டும். மேலும் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சேது, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லையா மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story