சேரன்மாதேவி அருகே அங்கன்வாடி ஊழியர் தற்கொலை கடன் தொல்லையால் சோக முடிவு
அங்கன்வாடி ஊழியர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேரன்மாதேவி,
சேரன்மாதேவி அருகே கடன் தொல்லையால் மனமுடைந்த அங்கன்வாடி ஊழியர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது;
அங்கன்வாடி ஊழியர்
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே வீரவநல்லூர் அடுத்து உள்ள அத்தாளநல்லூரை சேர்ந்தவர் நயினார். இவரது மனைவி சிவகாமி (வயது 46). இவர் சேரன்மாதேவி மல்லிகா நகரில் உள்ள அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நயினார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவகாமிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் சிவகாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சிவகாமி 2 மகள்கள் திருமணத்திற்காக கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
சாவு
இதனால் கடன் தொல்லையால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் சிவகாமி இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் மனமுடைந்த அங்கன்வாடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story