தென்காசியில் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தர்ணா போராட்டம்
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தென்காசி,
தென்காசியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டம்
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தென்காசியில் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடிமரம் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செய்யது அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகூரப்பா, துணைச் செயலாளர் மருதநாயகம் சாதிக் அலி, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஏராளமானோர் பங்கேற்பு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் மைதீன் சேட் கான், முன்னாள் கவுன்சிலர் ராசப்பா மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story