விவசாயிகளுக்கான கடன் அட்டை பதிவு முகாம்


விவசாயிகளுக்கான கடன் அட்டை பதிவு முகாம்
x
தினத்தந்தி 20 Feb 2020 9:45 PM GMT (Updated: 2020-02-20T21:52:41+05:30)

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி தகவல் மையத்தில் விவசாயிகளுக்கான கடன் அட்டை பதிவிற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

தா.பழூர், 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி தகவல் மையத்தில் பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தின்கீழ் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கு பதிவு செய்யும் முகாம் மற்றும் விவசாயிகளுக்கான கடன் அட்டை பதிவிற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. 

இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் முகம்மதுபாரூக் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் லெட்சுமிபிரியா முன்னிலை வகித்தார். முகாமில் விவசாயிகளுக்கான கடன் அட்டை பதிவு நடைபெற்றது. 

இதில் தா.பழூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கிஷோர் வினய், கோடாலி கருப்பூர் கனரா வங்கி கிளை மேலாளர் சிவக்குமார், தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story