செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் கார்டு பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் கார்டு பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-20T22:28:42+05:30)

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் கார்டு பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் இன்று முதல் இந்த மாதம் 29-ந் தேதி வரை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான யு.டி.ஐ.டி. ஸ்மார்ட் கார்டுக்கான விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஸ்மார்ட் கார்டு பெற்றிட தங்களிடம் உள்ள புத்தக வடிவிலான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள் ஆதார் அட்டை நகல் ரே‌‌ஷன்கார்டு மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் சான்றுகளின் நகல்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் குழுவால் சரிப்பார்க்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவில் செல்லதக்க ஸ்மார்ட் கார்டு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அவர்களின் வீட்டுக்கே தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களிடம் உள்ள புத்தக வடிவிலான தேசிய அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் இன்று முதல் இந்த மாதம் 29-ந் தேதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெறுகிற மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் கார்டுக்கான சிறப்பு முகாம்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் உரிய விண்ணப்பங்கள் விலையில்லாமல் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்று நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நேரில் வர இயலாதவர்கள் பெற்றோர் பாதுகாவலர்கள் உறவினர்கள் வாயிலாகவும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களிலும் நடைபெறு கிற ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கான முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று பயன் பெறுங்கள்.

Next Story