மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவர் கைது + "||" + College student arrested for threatening civilians in Pudukkottai

புதுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவர் கைது

புதுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவர் கைது
புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்“ செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,

இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் “டிக் டாக்“ செயலியை பயன்படுத்தி வீடியோ தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு “டிக் டாக்” செயலி மூலம் வீடியோ தயார் செய்து வெளியிடும் சிலர் மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சில வாலிபர்கள் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் “டிக் டாக்” செய்து வெளியிட்டு, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், திருச்சி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், சாலையோரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கல்லூரி மாணவர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் “டிக்டாக்” செய்து, அதை வெளியிட்டு உள்ளார். இந்த மாணவர், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது இடிப்பது, அவர்களின் முன்பு முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடுவது, அவர்களை தள்ளி விடுவதுபோல “டிக் டாக்” செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.


கல்லூரி மாணவர் கைது

இதைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை கைது செய்யுமாறு வடகாடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாஸ் அந்த மாணவரை கைது செய்தார். அவரது பெயர் கண்ணன் (வயது 21). வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்தவர். கைதான அந்த மாணவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் முழுவதும் 358 வழக்குகள் பதிவு; 412 பேர் கைது
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறியதாக 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்: தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அவரது கைது தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. சென்னையில் பயங்கரம் பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை 2-வது மாடியில் இருந்து கீழே வீசிய தொழிலாளி கைது
10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
4. காரமடை அருகே பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி முன்னாள் தலைவர், செயலாளர் கைது
காரமடை அருகே உள்ள பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் தலைவர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
5. பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை - தொழிலாளி கைது
10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.