கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ.8¾ லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் - எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ.8¾ லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் - எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 Feb 2020 2:45 AM IST (Updated: 20 Feb 2020 11:08 PM IST)
t-max-icont-min-icon

கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ.8¾ லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்தை வி.பி.சிவசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

ஊஞ்சலூர், 

ஊஞ்சலூர் அருகே கிளாம்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட பாம்பகவுண்டன்பாளையத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.8லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு வி.பி.சிவசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.சுப்பிரமணியம், கிளாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டு்றவு சங்க தலைவர் தேவராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம், பாசூர் பெரியசாமி, சாரல் கணேஷ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story