பிரம்மா குமாரிகள் நடத்தும் ஆன்மிக கண்காட்சி: விபத்தை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
பிரம்மா குமாரிகள் நடத்தும் ஆன்மிக கண்காட்சியில் விபத்தை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை,
சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். பஸ் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை அணிவகுப்பு மைதானத்தில் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனம் கண்காட்சி நடந்து வருகிறது.
2-ம் நாளன்று இனிமையான வாழ்க்கை பயணம் என்ற தலைப்பில் ஆட்டோ மற்றும் பஸ் டிரைவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் பதற்றமின்றி வாகனம் ஓட்டுதல், விபத்தில்லா பயணம், பயணிகளிடம் நல்லிணக்கம் போன்றவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு விபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றுவது குறித்து பேசினார். பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் அண்ணாநகர் பொறுப்பாளர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார்.
அறிவியலும் ஆன்மிகமும்
குகை போன்ற செட் அமைத்து அதற்கு குளிரூட்டி, அமைக்கப்பட்டு இருந்த பனிலிங்கம் மற்றும் ஜோதிர்லிங்கத்தை பார்வையாளர்கள் பார்வையிட்டனர். இதுதவிர தியானகூடம், போதை விழிப்புணர்வு அரங்கம், தண்ணீர் அரங்கம், இளைஞர்கள் முன்னேற வழிகாட்டும் அரங்கம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
அறிவியலுக்கும், ஆன்மிகத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் அரங்கமும், அதில் உள்ள புதிர் போட்டி சவால்களும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்த அரங்கில் 9 பதாகைகளும் 8 அறிவியல் சோதனை பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பெட்டிகளுக்கும் பதாகைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் விளக்கமளித்தனர்.
Related Tags :
Next Story