மண்ணிவாக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மண்ணிவாக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2020 4:00 AM IST (Updated: 20 Feb 2020 11:57 PM IST)
t-max-icont-min-icon

மண்ணிவாக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் சண்முகா நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் குலேந்திரன். இவர் ஜெர்மனி நாட்டில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடும்பத்துடன் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் குலேந்திரன் ஜெர்மனி நாட்டிற்கு சென்றுவிட்டார். குலேந்திரன் மகன் அரிகரன் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்தாழ்பாள் போட்டப்படி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அரிகரன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவரது தாய் மதுரா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அரிகரன் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டேரி போலீசார் தூக்கில் தொங்கிய மதுராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரா எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story