2-வது மனைவி இறந்த துக்கத்தில் வி‌‌ஷம் குடித்து மின்வாரிய அதிகாரி தற்கொலை


2-வது மனைவி இறந்த துக்கத்தில்   வி‌‌ஷம் குடித்து மின்வாரிய அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2020 4:15 AM IST (Updated: 21 Feb 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

2-வது மனைவி இறந்த துக்கத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாளையக்கார தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 76). ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி ஆவார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி விவாகரத்து பெற்றுக்கொண்டு தனது குழந்தைகளுடன் ஸ்ரீரங்கம் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சீனிவாசன், லட்சுமி(55) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். 2-வது மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கடந்த வாரம் லட்சுமி உடல்நிலை சரியில்லாததால் இறந்து போனார்.

வி‌‌ஷம் குடித்து தற்கொலை

2-வது மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மன உளைச்சலில் சீனிவாசன் இருந்து வந்தார். நேற்று முன்தினம் எலி மருந்து (வி‌‌ஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பலியான சீனிவாசனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story