சேலத்தில் மாவட்ட தடகள போட்டி 400 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


சேலத்தில் மாவட்ட தடகள போட்டி 400 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 11:00 PM GMT (Updated: 2020-02-21T03:32:01+05:30)

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது.

சேலம்,

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. நேற்று மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி நடந்தது.

போட்டிகள் 17 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. 100, 200, 400, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து 400 மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அதிகாரிகள் செய்திருந்தனர்.

Next Story