கண்டதேவியில் குதிரை-மாட்டு வண்டி பந்தயம்


கண்டதேவியில் குதிரை-மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-21T04:27:43+05:30)

தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் குருபூஜை விழாவையொட்டி குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை உதையாச்சி கிராமத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் வண்டியும், 2-வது பரிசை உஞ்சனை சண்முகராஜா வண்டியும், 3-வது பரிசை பணங்குடி கோவினிப்பட்டி இந்தியன்ராஜா வண்டியும், 4-வது பரிசை இல்லங்குடி மன் சூரான் வண்டியும், 5-வது பரிசை திருவானைக்காவல் அய்யர் வண்டியும் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை மருங்கூர் நாச்சியார் வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 4-வது பரிசை உதையாட்சி வக்கீல் கருணாநிதி வண்டியும், 5-வது பரிசை பீர்க்கலைக்காடு சண்முகம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

Next Story