நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் தர்ணா


நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 21 Feb 2020 5:24 AM IST (Updated: 21 Feb 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பஞ்சாலை தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள சுதேசி, பாரதி மில் தொழிலாளர்களுக்கு 13 மாத நிலுவை சம்பளம் வழங்கப்படவில்லை. ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு 11 மாத சம்பளம் வழங்கவில்லை. இந்த நிலுவை சம்பளத்தை விரைவில் வழங்கவேண்டும்என்பனஉள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அனைத்து பஞ்சாலை தொழிலாளர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவுக்கு அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கங்களின் தலைவர் அபிசேகம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் சேதுசெல்வம், ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

கண்டன கோஷம்

தர்ணா போராட்டத்தில் பஞ்சாலை தொழிற்சங்கங்களின் துணைத்தலைவர்கள் ஞானசேகரன், பாப்புசாமி, அண்ணா அடைக்கலம், இளங்கோவன், குணசேகரன், கபிரியேல், செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் ஊதியம் வழங்கக்கோரி கண்டன கோஷமிட்டனர்.

Next Story