கிராம நிர்வாக அலுவலகங்களில் உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம்


கிராம நிர்வாக அலுவலகங்களில் உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 22 Feb 2020 3:00 AM IST (Updated: 21 Feb 2020 5:29 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த முகாமிற்கு கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் தலைமை தாங்கினார். வேலூர் வட்டார உதவி வேளாண் அலுவலர் பிரபாகர், உதவி தொழில்நுட்ப அலுவலர் நிவேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், விவசாயிகள் கலந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, சிட்டா ஆகியவற்றின் நகலை இணைத்து வழங்கினர். அவற்றை கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண் அலுவலர் ஆகியோர் சரி பார்த்து பெற்றுக்கொண்டனர். முகாமில் 47 விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் அளித்தனர். விண்ணப்பங்கள் அனைத்தும் விவசாயிகள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியில் வழங்கப்பட்டு அவர்களுக்கு உழவர் கடன் அட்டை பெற்று தரப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று வேலூர் சேண்பாக்கம், அப்துல்லாபுரம், அன்பூண்டி, மேல்மொணவூர், பெருமுகை, அலமேலுமங்காபுரம் உள்பட வேலூர் தாலுகாவில் 50–க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலங்களில் உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம் நடந்தது.

Next Story