குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பாளையங்கோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பாளையங்கோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2020 3:30 AM IST (Updated: 21 Feb 2020 6:03 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பாளையங்கோட்டையில் முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை, 

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பாளையங்கோட்டையில் முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம் 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை உடனே திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசல் சுன்னத்வல் ஜமாத் சார்பில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் செய்யது அப்பாஸ் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் முத்துமுகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

கோ‌ஷங்கள் 

இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் இமாம் முகமது முகைதீன், செய்து அலி பாதுஷா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பிலால், ஜமால் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Next Story