அம்மா இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள் பெற 3,518 பெண்களுக்கு 2019–2020–ம் ஆண்டு பயனடைய இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள் பெற ஊரக பகுதியில் 2,806 பெண்களுக்கும், நகர்புறப்பகுதியில் 712 பெண்களுக்கும் என மொத்தம் 3,518 பேருக்கு 2019–2020–ம் ஆண்டு பயனடைய இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tamilnadumahalir.org என்ற இணையதள முகவரியில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஊரகப்பகுதி, நகர்புற பகுதிக்கென தனித்தனியே உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் சமர்ப்பித்து ஒப்புகை ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story