தொழில் நிறுவனங்கள் பயிற்சி அளிக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தொழில் நிறுவனங்கள் பயிற்சி அளிக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 22 Feb 2020 3:30 AM IST (Updated: 21 Feb 2020 6:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

பயிற்சி 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பயிற்சி வழங்கிட அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு... 

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை நேரிலோ அல்லது 0461–2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பம் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் வருகிற 29–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story