அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 22 Feb 2020 3:15 AM IST (Updated: 21 Feb 2020 8:50 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் இயக்கத்தின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நாகர்கோவில், 

திருவட்டார் கல்வி மாவட்டத்தில் அண்டுகோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரியர்களை பழிவாங்கும் போக்கை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு இயக்க மாவட்ட தலைவர் ஹேம்லெட்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் அழகுராஜ் முன்னிலை வகித்தார். போராட்டத்தை செயலாளர் சுரே‌‌ஷ்குமார் தொடங்கி வைத்து பேசினார். ஜான்கென்னடி, அலெக்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் சுபாஸ் சந்திரபோஸ் போராட்டத்தை முடித்து வைத்தார். காலையில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை வரை நடந்தது.

Next Story