மாற்றுத்திறனாளிகளிடம் கருத்து கேட்பு


மாற்றுத்திறனாளிகளிடம் கருத்து கேட்பு
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 3:34 PM GMT)

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 40 மாற்றுத்திறனாளிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

கரூர், 

போலீஸ்துறையில் மாற்றுத்திறனாளிகள் நடத்தப்படும் விதம் குறித்தும், அவர்கள் கொடுக்கும் புகார் மனு மீதான நடவடிக்கை குறித்தும், அவர்களின் சமூக பாதுகாப்பு குறித்தும், மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை அறிந்து கொள்ள கரூர் மாவட்ட போலீஸ்துறையினருக்கு சிறப்பு சைகை மொழி பயிற்சி வழங்குவது குறித்தும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 40 மாற்றுத்திறனாளிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. 

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி செண்பகவள்ளி, அன்பாலயா பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் கவுசர்நி‌ஷா உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.


Next Story