தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்டம். புகளூர் வட்டம் தளவாய்பாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் தொடர்பான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட குடிமக்கள் நுகவோர் மன்றங்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக உணவு பொருட்களில் கலப்படம் செய்வது தொடர்பாகவும், லிட்டர் அளவு, எடை அளவுகளில் நடைபெறும் தவறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட பல்வேறு செயல்விளக்க கண்காட்சிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன். வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன், மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, குடிமக்கள் நுகர்வோர் மன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம், கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ரமேஷ்பாபு, வட்டாட்சியர் சிவக்குமார் (புகளூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story