திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவள்ளூர் அருகே   பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2020 3:30 AM IST (Updated: 22 Feb 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள சொக்க நல்லூர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அதில் மேலாளராக சொக்க நல்லூரை சேர்ந்த மூர்த்தி (வயது 28) உள்ளார். அந்த பெட்ரோல் பங்கில் ஊழியராக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் கடந்த 4 மாதங்களாக தங்கி வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அவர் பெட்ரோல் பங்கில் உள்ள ஒரு அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதைபார்த்த மேலாளரான மூர்த்தி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story