தியாகராயநகர் திருப்பதி கோவிலில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு தரிசனம்
சென்னை தியாகராயநகரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர்களுக்காக ‘யுவ சேவா தரிசன திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர் களுக்காக ‘யுவ சேவா தரிசன திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.
இதில், ஐயப்பன்தாங்கலில் உள்ள சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 50 மாணவ-மாணவிகள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கொண்டு வந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள், சாமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது.
மேலும், தீர்த்த பிரசாதம் உள்ளிட்ட பிரசாதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு அர்ச்சகர்களின் வேத ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story